1. (i) (b) சரத்துக்கு உட்பட்டு, மாகாண சபைகளின் பட்டியல் I இன் கீழ் உள்ள அதிகாரங்களை முழுமையாகச் செயற்படுத்துதல். மத்திய அரசால் தக்கவைக்கப்பட்டுள்ள பட்டியல் I இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.
(ii) பொலிஸ் அதிகாரம் குறித்து புதிய பாராளுமன்றத்தில் மேலும் ஆராயப்பட்டு இணக்கம் காணப்பட வேண்டும்.
(iii) கட்சித் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் III செயல்பாடுகள், மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.
(iv) மாகாண சபை (மத்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய கொள்கை கட்டமைப்பிற்குட்பட்டு);
i பாடசாலைக் கல்வி
ii தொழிற் பயிற்சி
iii சட்டப்பூர்வமாக பல்கலைக்கழக மட்டத்திற்கு தரம் உயர்த்தக்கூடிய பட்டம் வழங்கும் நிறுவனங்களை நிறுவுதல்
iv மாகாண சுற்றுலாவை ஊக்குவித்தல்
v விவசாய நவீனமயமாக்கல் மற்றும் பண்ணை சேவைகளை வழங்குதல்,
உள்ளிட்ட நீண்ட காலத்தில் அடையக்கூடிய மாற்றங்கள் தொடர்பிலானபொறுப்பு
அது தொடர்பான சட்டங்கள்,
அ. மாகாண கல்வி சபைகளை நிறுவுதல் உட்பட பட்டியல் எண். 1இற்கு உட்பட்ட கல்விச் சட்டங்கள்
ஆ. தொழிற்கல்விக்கான மாகாண சபையொன்றை நிறுவுவதற்கான சட்டம்;
இ. பட்டம் வழங்கும் நிறுவனங்களை நிறுவுவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம்;
ஈ. விவசாய நவீனமயமாக்கல் மற்றும் விவசாய நில அடிப்படையில் சேவைகளை மேற்கொள்வதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமளிக்கும் சட்டம்;
உ. மாகாண சுற்றுலாக் குழுக்களை நியமிக்கும் அதிகாரம் கொண்ட மாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபைகளை நிறுவுவதற்கான சட்டம்.
(v) பயனாளிகளுக்கு இலக்கு சேவைகளை வழங்குவதற்கு மாகாண சபைகள் பொறுப்பு வழங்குதல்.
(Vi) தென் பகுதியிலுள்ள ஏழு முதலமைச்சர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் மற்றும் உடன்பாட்டை எட்டுதல்.
(vii) 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தின் முதலாவதுஅட்டவணையை பின்வருமாறு திருத்துதல்.
(i) உருப்படியை நீக்குக (2)
(ii) உருப்படியை நீக்குக (3)
(iii) உருப்படி (8) இணை நீக்கி பதிலீடு செய்தல்
“(8) வருடாந்த செலவு ஒரு பில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட எந்தவொரு கைத்தொழில்.”
(viii) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மாகாண பொருளாதார அபிவிருத்தி சபைகளை நிறுவுதல்.
(ix) 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, மாவட்ட மட்டத்தில் தேவையற்ற பொதுப் பணிகளைக் கொண்ட இரண்டு இணை நிர்வாகங்கள் உருவாகியுள்ளன. எனவே இந்த கட்டமைப்பை எளிமைப்படுத்த வேண்டும். பாராளுமன்ற சட்டத்தின் மூலம்,
அ. மாவட்டத்தில் அரசாங்க மற்றும் மாகாண அபிவிருத்தி திட்டங்களை ஒருங்கிணைத்தல்,
ஆ. பல்பரிமாண வறுமையைக் குறைத்தல்,
இ. நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைதல் மற்றும்
ஈ. அவ்வாறான ஏனைய குறிப்பிட்ட செயற்பாடுகளுக்கு
மாவட்ட அபிவிருத்தி சபைகள் நிறுவப்படும்.
1. பாராளுமன்றமும் மாகாண சபையும் உள்ளூராட்சி சபைகளுக்கு அதிக அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் வழங்கலாம்.
2. தேசிய காணி ஆணைக் குழு சட்டம் மற்றும் தேசிய காணிக் கொள்கைச் சட்டத்தை இயற்ற புதிய பாராளுமன்றம்.
3. மக்கள் சபை சட்டத்தை நிறைவேற்றுதல்.
4. மாகாண சபைப் பிரதிநிதிகளைக் கொண்ட 2ஆவது சபை கூடமொன்றை நிறுவுதல். அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை இந்த சபை மேற்பார்வை செய்யும்.
5. 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள அடிப்படைத் தேர்தல் முறையின் கீழ் 2025 இல் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல்.
(i) பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடு மற்றும்
(ii) பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தல்.