ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

• கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு.

மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அகில இலங்கை இளைஞர் அமைப்பின் உப தலைவர் சட்டத்தரணி தினேஷ் தலைமையில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

Share the Post:

Related Posts

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்

• அதற்காக கல்வி அமைச்சர் என்ற வகையில் அன்று வெள்ளை அறிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக ஜே.வி.பி. வீதியில் இறங்கியது. • Gen Z  தலைமுறைக்கு

Read More

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

• இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். • ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று அன்று கூறியது பொருளாதார சவாலை எதிர்கொள்ளவே: இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’

Read More