“ரணிலை அறிந்து கொள்வோம்” முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம்

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில்  நாளை (07) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

09 மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளுராட்சி  மன்றங்கள், 4984  வட்டாரங்கள், 14026  கி.உ. பிரிவுகள் மற்றும் 53 896 கிராம வீதிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை  மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின்  உள்ளடக்கம் அடங்கிய  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதன் கீழ் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை எதிர்கொள்ளாத வகையில்  பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் கௌரவமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share the Post:

Related Posts

ஒவ்வொரு மாணவரும் ஆங்கில மொழியில் புலமை பெறுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும்

• அதற்காக கல்வி அமைச்சர் என்ற வகையில் அன்று வெள்ளை அறிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக ஜே.வி.பி. வீதியில் இறங்கியது. • Gen Z  தலைமுறைக்கு

Read More

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

• இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். • ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று அன்று கூறியது பொருளாதார சவாலை எதிர்கொள்ளவே: இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’

Read More