Day: புரட்டாதி 17, 2024

ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

• கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு. மன்னாரில் இன்று (17) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்!

• பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நியாயம் பெற்றுக் கொடுப்பேன். • நாட்டு மக்கள் பொறுமையாக இருந்த நேரத்தில், அதிகாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட சஜித்தும் அநுரவும் தேர்தல் நடத்துமாறு கோரி போராட்டம் நடத்தினர். • சஜித்தும் அநுரவும் சொல்வது போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை மீறி  நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. • முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரை விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்- மன்னாரில் ஜனாதிபதி தெரிவிப்பு. தமிழ், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்!

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின் முன்னேற்றத்துக்காக வாக்களிப்போம்!

ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு! • இரு வருடங்களுக்கு முன்னர் கண்ட இருண்ட யுகத்தை மறந்துவிடக் கூடாது. • இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்கினோம். • கஷ்டப்படும், வறிய மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் எவரும் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை- குளியாப்பிடிய மக்கள் பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின் முன்னேற்றத்துக்காக வாக்களிப்போம்!