info

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

• சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது எப்படி? அநுர  நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – ஜனாதிபதி. நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழிற் துறையினர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்த நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

ஜே.வி.பி கூறுவதைப்போல், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்க வேண்டுமானால், நீதிமன்ற அதிகாரத்தையும், வழக்குத் தொடரும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றிக்கொள்ள வேண்டிவரும்!

• அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கைகளை மாத்திரமே எடுக்க முடியும். தீர்ப்பை வழங்க முடியாது. • நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் ஊழல் எதிர்ப்புச் செயலகத்தின் பணிகளை ஜே.வி.பி.யே முன்னெடுத்தது. • ஊழலை ஒழிக்க கோஷங்கள் மட்டும் போதாது: ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் – ஜனாதிபதி. தாம் ஆட்சிக்கு வந்தால், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்குவோம் என்று ஜே.வி.பி. கூறினாலும், அதனைச் செய்வதற்கு நீதித்துறை அதிகாரங்களையும், வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நேரிடும் ஜே.வி.பி கூறுவதைப்போல், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்க வேண்டுமானால், நீதிமன்ற அதிகாரத்தையும், வழக்குத் தொடரும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றிக்கொள்ள வேண்டிவரும்!

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்!

• மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். • விவசாயத் துறையை நவீனமயப்படுத்தி வடக்கு விவசாயத்திற்கு முன்னுரிமையளிக்கப்படும். • காங்கேசன்துறை, பூநகரி, மாங்குளம் ஆகிய விசேட வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்படும். • வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்படும் – யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற “இயலும் ஶ்ரீலங்கா”பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு.   வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க  அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்!

சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜனாதிபதி உறுதிமொழி

• மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி ஒவ்வொரு மாகாணத்திற்கும் விரிவான அபிவிருத்தி. • வடக்கு மக்களை அச்சுறுத்தியது  குறித்து அநுர வெட்கப்பட வேண்டும். • வடக்கு மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும். • யாழ்ப்பாணத்தை தொழில்  மத்திய நிலையமாக மாற்றுவோம். • பொருளாதாரத்தைப் போன்றே சமாதானத்தையும் ஏற்படுத்துவோம்- ஜனாதிபதி. வடக்கு மக்களுக்கு  சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜனாதிபதி உறுதிமொழி

“ரணிலை அறிந்து கொள்வோம்” முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம்

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில்  நாளை (07) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. 09 மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளுராட்சி  மன்றங்கள், 4984  வட்டாரங்கள், 14026  கி.உ. பிரிவுகள் மற்றும் 53 896 கிராம வீதிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை  மக்களுக்கு அறிந்து கொள்ள “ரணிலை அறிந்து கொள்வோம்” முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம்

ஆயுர்வேத துறையை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்போம்!

• ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபை ஸ்தாபிக்கப்படும். • 2022 ஆம் ஆண்டில் சிகிச்சைக்காக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி இப்போது எழுந்து நடக்கிறார். • தகுதியற்ற வைத்தியர் ஒருவர் குணமடைந்த நோயாளியை மீண்டும் நோய்வாய்ப்படுத்த முயற்சிக்கிறார். • அவரின் பயனற்ற மருந்தைக் குடித்தால் நோயாளியை மீண்டும் குணப்படுத்த முடியாது – உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை ஆயுர்வேத துறையை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்போம்!

நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் பங்காற்றுகிறது

• நாட்டிற்காக ஒன்றுபட்டால் அதற்கு கூச்சல் போடும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை. • ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக அநுர திஸாநாயக்க கூறுகையில் இறக்குமதி பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்: முரண்பாடான கருத்துக்கள் குறித்து நாட்டுக்கு தெளிவுபடுத்துமாறு  அநுரவிற்கு ஜனாதிபதி அழைப்பு. • மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறும் அநுரவின் 232 பக்க விஞ்ஞாபனம் “வெற்று மாற்றம்” ஆகும். • நாட்டிற்குத் தேவையான அரசியல், பொருளாதார, சமூக நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் பங்காற்றுகிறது

ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

• நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று ஏனைய  தலைவர்கள் தப்பியோடிய போது நான் கஷ்டப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன். • வாக்குறுதியளித்தபடி எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். • நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழி ‘இயலும் ஶ்ரீலங்கா’ வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. • தேசிய மக்கள் சக்தி மக்களிடம் பொய் சொல்லாமல் தங்களின் உண்மையான பொருளாதார கொள்கையை நாட்டுக்கு சொல்ல வேண்டும் – ஜனாதிபதி ஹினிதுமவில் தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகத் தான்  புதிய பயணமொன்றை ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

தம்மிக்க பெரேராவின் தெனியாய ‘DP Education’ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய,மொரவக்க பிரதேசத்தில் இன்று  நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாத்தறை மாவட்டத்தின் தெனியாய கெடபெறுவ விகாரையில்  பாராளுமன்ற உறுப்பினர்  தம்மிக்க பெரேராவினால் முன்னெடுக்கப்படும்  ‘DP Education’ நிறுவனத்திற்கும் விஜயம் செய்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, நிறுவன நிர்வாக அதிகாரிகளுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். கணினி மற்றும் தகவல் தொழிநுட்ப கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்த தம்மிக்க பெரேராவின் தெனியாய ‘DP Education’ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு

முச்சக்கர வண்டி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் முச்சக்கர வண்டி சாரதிகள் காலிமுகத் திடல் போராட்ட பூமியில் ஒன்று கூடினர்: அவர்களைச் சந்திக்கச்  சென்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு. • நான்கு நிறைவேற்று ஜனாதிபதிகளால் 25 வருடங்களாக தீர்க்கப்படாத முச்சக்கரவண்டி தொழிற்துறையை ஒழுங்குபடுத்தும் பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் தான் தீர்வு வழங்கினார். • எரிபொருள் வரிசையில் பலநாட்களை கழித்த எமக்கு எமது பணியை தொடர்வதற்கான பின்னணியை ஜனாதிபதி உருவாக்கினார். • முச்சக்கர வண்டி தொழில்துறையின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு