Day: புரட்டாதி 2, 2024

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது

• சஜித்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது : சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவுக்கு  அளிக்கும் வாக்குகளாகும். • ஒருவரின் வீடு இடிந்து விழுந்தால், வலுவான அடித்தளத்திலேயே புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படும். • அந்த வீட்டை நிர்மாணிப்பதற்காவே நான் மக்கள் ஆணையை கோருகிறேன் – கெக்கிராவயில் ஜனாதிபதி தெரிவிப்பு. இன்று நான் நாட்டில் ஏற்படுத்திய பொருளாதார ஸ்திரத்தன்மையின் காரணமாகவே  அன்று பொருளாதார சவாலுக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 05 வருட அவகாசம் கோருகிறேன்!

• வரிசை யுகத்திற்கு முடிவுகட்டி பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமிட்ட  எனக்கு தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. • மக்கள் சிரமப்பட்டபோது தப்பியோடிய சஜித்துக்கும் அனுரவுக்கும்  செப்டெம்பர் 21ஆம் திகதி  உரிய இடத்தை வழங்க மறக்க வேண்டாம். • கோட்டாபயவின் கொள்கையை ஒத்த கொள்கையே சஜித்தும் அநுரவும் முன்வைப்பு: வரியைக் குறைத்து அரச வருமானத்தைக் குறைத்தால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும்- ஜனாதிபதி. கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 05 வருட அவகாசம் கோருகிறேன்!